குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவில் உளவாளி மற்றும் அவரது மகள் மீது இரசாயன தாக்குதல் நடத்துவதற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டிருப்பார் என வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இரசாயன தாக்குதல் நடத்துமாறு புட்டின் உத்தரவிட்டிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என குறிப்பிட்டுள்ள அவர் இரண்டாம் உலகப் போரின் பின்னர் இந்த இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் ( Sergei Skripal ) மற்றும் அவரது மகள் மீது கடந்த 4ம் திகதி இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலினால் குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியையும் மன்னிக்க முடியாத வகையிலும் அமைந்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.