ரஸ்ய உளவாளிக்கு பிரித்தானியாவில் நச்சு கொடுத்ததான விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர மோதல் அதிகரித்துவரும் நிலையில், ரஸ்ய தொழிலதிபர் நிகோலாய் குலுஸ்கோவ் என்பவரின் மரணம் கொலையா என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
68 வயதான குல்ஸ்கோவ் கடந்த மார்ச் 12ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்து காணப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் சம்பவித்திருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ரஸ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளைக் கொல்ல ரஸ்யா நச்சுப் பொருளை கொடுத்ததாக பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ள நிலையில இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் குல்ஸ்கோவ்வின் மரணம் தொடர்பிலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த இரு விவகாரங்களும் இடையில் எவ்வி சம்பந்தமும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் நிகோலாய் குல்ஸ்கோவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பான வழக்கு விசாரணை, தீவிரவாத தடுப்பு காவல்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ரஸ்யாவில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டவர் என தொழிலதிபர் நிகோலாய் க்ளுஸ்கோவ் குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.