171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் எவ்வாறு வெற்றி கொள்ளப்படும் என்பதனை பொறுத்திருந்து பாருங்கள் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அனைவரும் கையொப்பமிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love