எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பிர்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றம் 11-வது நாளாக முடங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது
மோடி அரசாங்கம் மீது இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகின்றது
Mar 19, 2018 @ 03:27
மோடி அரசாங்கம் மீது தெலுங்கு தேசம் கட்சி இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகின்றது. இந்திய பாராளுமன்றத்தில் பிரதமர் மீது நரேந்திர மோடி அரசாங்கம் மீது தெலுங்கு தேசம் கட்சி இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம் கட்நி மோடி அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற சபாநாயகரிடம இது தொடர்பாக கடிதம் கையளிக்கப்பட்டிருந்த போதும் அன்றையதினம் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம் இன்றையதினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்திருந்தது.
இந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்பு இன்று நாடாளுமன்றம் கூடுகின்ற போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அது எடுத்துக் கொள்ளப்பட முடியாத சூழ்நிலையில், இனி 6 மாதத்துக்கு பிறகுதான் அடுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்கின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது