குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார். இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களைச் சந்திக்காது ஜனாதிபதி திரும்பிச் சென்றிருந்தார்.
இந்நிகழ்வில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தபோதும், போராட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்து, அதனை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எவரும் சந்திக்காத நிலையில் அங்கிருந்தும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்