குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் அநேகமான சிங்களவ்hகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டடங்கள் வர்த்தக நிலையங்கள் தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் பற்றி அதிருப்தி கொண்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த தாக்குதல் சம்பவங்களினால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் பூரிப்படைந்துள்ளதாகவே தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983ம் ஆண்டில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் சிங்களவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் எனவும் சில ஆண்டுகளின் பின்னரே அது குறித்து வருந்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் இலங்கை கலாச்சாரத்துடன் இயைபொத்து போவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர அரேபிய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள முனையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.