Home இந்தியாதிருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்…

திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்…

by admin


விஎச்பி ரத யாத்திரையை மறித்து போராட்டம் நடத்துவதற்காக செங்கோட்டை நோக்கி சென்ற திருமாவளவனை காவல்துறையினர் கைது செய்தனர்.  ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் இந்த ரத யாத்திரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

ரத யாத்திரைக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு ரத யாத்திரை வர உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் ரத யாத்திரையை மறித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்திருந்ததுடன் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் அங்கு புறப்பட்டுச் சென்ற போதே அவரை காவல்துறையினர்  தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

இதேபோல் மறியல் போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More