குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கான செயற்த்திட்டம் இன்று காலை பத்துமணிக்கு விஸ்வமடுப் பகுதியில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணைமனுக்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்டவல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்த்திட்டம் இன்று காலை பத்துமணிக்கு விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது இவ் செயற் திட்டத்தில் கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமாலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் மாதிரி கருணைமனுக்களை பெற்று கையெழுத்திட்டு ஏற்பாட்டாளர்களிடம் வழங்க முடியும்
செயற்த்திட்டமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கருணைமனுக்கள் பொதுஅமைப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னன்சல் மூலமாகவும் அனுப்பி கையெழுத்து இடப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது இச் செயற் திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சுமார் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கருணை மனுக்களை அனுப்பவதே இதன் நோக்கமாகும் ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்புவதற்கு பொது அமைப்புக்களுக்கு அழைப்பு….
Mar 21, 2018 @ 04:54
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது
ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணைமனு க்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்டவல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்த்திட்டம் இன்று(21) காலை பத்துமணிக்கு விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது இவ் செயற் திட்டத்திற்கு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமாலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது
இன்று(21) ஆரம்பிக்கப்படும் இச் செயற்த்திட்டமானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கருணைமனுக்கள் பொதுஅமைப்புக்கள் இளைஞர் அமைப்புக்கள் என வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் நேரடியாகவும் மின்னன்சல் மூலமாகவும் அனுப்பி கையெழுத்து இடப்பட்ட பின்னர் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது இச் செயற் திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.