பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி பதவி விலகியுள்ளார். பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்ப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி முன்னர் அமைச்சராக இருந்தபோது, அரசு ஒப்பந்தம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
அத்துடன் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசும் வீடியோ வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் பதவிவிலகியுள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்