Home இந்தியாஎழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை வாங்கும் அமெரிக்க நிறுவனம்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை வாங்கும் அமெரிக்க நிறுவனம்

by admin


தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது.  அத்துடன், ஜெர்மன், செக், பிரான்ஸ் மொழியில் ‘ஒன் பார்ட் உமென்’ நாவலும், கொரியன் மொழியில் ‘பூனாச்சி’ நாவலும் மொழிபெயர்க்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து பெருமாள் முருகன் கூறுகையில், ”இப்படிப்பட்ட ஒரு வசதி செய்யப்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டநிலையிலும் கூட, இன்னும் போதுமான அளவில் நம்முடைய பாரம்பரியத்தை, பெருமையை உணர்த்தும் நூல்களை மொழிமாற்றம் செய்யவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில் நவீன இலக்கியத்தில் மொழிபெயர்க்கவில்லை. இது தொடங்கிவிட்டது” என்று தெரிவித்தார்.

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு மத அடிப்படைவாதிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் பெருமாள் முருகனுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் பெருமாள் முருகன் நீதியைப் பெற்றார்.

அமெரிக்காவின் குரோவ் அட்லாண்டிக் நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் பீட்டர் பிளாக்ஸ்டாக் கூறுகையில், ”பெருமாள் முருகனின் நாவலைப் பதிப்பிக்க ஆர்வமாக இருக்கிறேன். தமிழகத்தில் நிலவும் சாதி, அடையாளங்கள், திருமணம், குடும்பம் ஆகியவற்றை மிகுந்த நகைச்சுவையுடனும், உயிர்ப்புடனும் நாவலில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More