Home இலங்கைஐ.தே.க மறுசீரமைப்புப் பணிகள் மே மாதம் நடைபெறும்

ஐ.தே.க மறுசீரமைப்புப் பணிகள் மே மாதம் நடைபெறும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ருவான் விஜேயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பாரியளவிலான மாற்றங்களை மே மாதத்திற்குள் கண்டு கொள்ள முடியும் என தெரிவித்துள்ள அவர் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் பாரியளவில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த யோசனைகள் பற்றி அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More