குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த புகலிடக் கோரிக்கையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பெண் ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனி நோக்கி புகலிடக் கோரிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என தம்மை அடையளாப்படுத்திக்கொண்ட ஹூசெய்ன் காவாரி என்ற நபர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் மாரிய லெடன்பெர்கர் (Maria Ladenburger) என்னும் 19 வயதான மாணவியை கொலை செய்ததாக, ஹூசெய்ன் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், ஹூசெய்ன் ஈரானைச் சேர்ந்த 32 வயதானவர் என்பது விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.