குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விளையாட்டுத்துறையிலும் பால் நிலை சமத்துவமில்லை என அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட வீராங்கனை கேற்றி ப்ரென்னான் ( Katie Brennan ) குற்றம் சுமத்தியுள்ளார். கேற்றி ப்ரென்னான் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட Australian Football ) அணியின் தலைவியாக கடமையாற்றுக்கின்றார்.
போட்டியொன்றின் போது விட்ட தவறுக்காக தமக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை ஆண் வீரர் ஒருவர் செய்திருந்தால் குறைந்தபட்ச அபராதம் ஒன்றே விதிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண் வீரர்களுக்கு ஒரு விதமாகவும் பெண் வீராங்கனைகளுக்கு மற்றுமொரு விதமாகவும் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிரான போட்டித் தடை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் கேற்றி ப்ரென்னான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது