பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் ஸ்மித், வார்னர் ஆகியோர் தலைமைப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்மித்திற்குப் பதிலாக விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்தை பழுதாக்கியதாக ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலியா
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி பந்தை வேண்டுமென்றே பழுதாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். தென் ஆபிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது இவ்வாறு பந்தை வேண்டுமென்றே பழுதாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ரிவர்ஸ்சுவிங் செய்வதற்காக பந்தை இவ்வாறு பழுதாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலிய அணியின் கமருன் பென்கொறப்ட் இவ்வாறு பந்தை பழுதாக்கியுள்ளமை வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ள நிலையில் பென்கொறப்ட் தாம் பந்தை பழுதாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கட் பேரவை இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.