டோக்லாம் விவகாரத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதி விவகாரத்தில் இந்தியா விழிப்புடன் உள்ளது எனவும் அங்கு எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் விதத்தில் இந்தியா தயாராக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு எதிர்பாராத நிலைமை ஏற்பட்டாலும் இந்தியா சமாளிக்கும் எனவும் படைகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது எனவும் தெரிவித்துள்ள அவர் எல்லைப் பகுதியில் தேசத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளர்h.
சீனாவில் எதிர்வரும் ஜூன் 9-ம் திகதி முதல் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசவுள்ள நிலையில் டோக்லாம் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகின்றது