Home இந்தியா இளையராஜா மீது கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு

இளையராஜா மீது கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு

by admin

இசையமைப்பாளர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இயேசு கிறிஸ்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியைப் போல வேறு ஒருவர் கிடையாது எனவும் தான் அடிக்கடி ஆவணபடங்களை பார்ப்பதை நான் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் இதுவரை தான் பார்த்த ஆவணப்படங்களில் இயேசு இறந்தார், உயிர்த்தெழுந்து வந்தார் என்பதில் தான் கிறிஸ்தவமே நிற்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதனைச் சொல்லி அப்படி ஒன்று நடக்கவில்லை என்று யூடியூபில் வரலாற்று ரீதியாக போடுகிறார்கள். ஆனால் உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் எனவும் உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இளையராஜாவின் இந்த உரையானது கிறிஸ்தவத்தையும் அதன் ஆணி வேரான மத நம்பிக்கையையும் சிறுமைப்படுத்துவதாக, ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தியதாக தெரிவித் கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன.

இந்நிலையில், கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாட்டு மனு ஒன்றை அளித்துள்ளது. அதில் கிறிஸ்தவ மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

2 comments

Gabriel J Anton March 27, 2018 - 3:17 pm

He is supposed to be a musician and do not have any qualification to comment on Christ. He must know his limits. A stupid fellow

Reply
K.Ranjithkumar March 28, 2018 - 8:49 am

Sir now only you know this fanatic musician. He is bit of a lunatic fellow. Hence he made such halamark in music world. That undenyable. Yes he is a music legend. Though he is bit so so sort sighted bugger. Where even in those music concerts he will show his anger over any of his own musicians who ever not aligned in his arena shouted publicly made others audience bit nervous. That had been happened in several occasions in Canadian soil as well. Though because of his anger management by pleasing him. Current BJP Hindutva Indian governance confer Pathmapusan award for him by made their pet. There for those masters obedience this Guy is acting now currently. That’s all no wonder.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More