Home இலங்கைகோட்டாபயவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு…

கோட்டாபயவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு…

by admin

 


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை விலக்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 05ம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 06ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More