குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழமக்கள் ஜனநாயக கட்சியை நான் எப்போதும் ஒட்டுக்குழு என தான் பேசவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தனது கட்சி சார்பில் வேறு யாரவாது பேசி இருக்கலாம் எனவும் அது பற்றி தான் பதிலளிக்க முடியாது எனவும் அவ்வாறு பேசியவர்களே பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்h.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவுக்கான முதலாவது சபை அமர்வு நேற்றைய தினம் மாலை வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்தது தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா அவ்வாறு தெரிவித்துள்ளார்
தாங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேரவில்லை எனவும் சபைகளில் பெரும்பான்மையை பெற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என பொது அமைப்புக்கள் , புத்திஜீவிகள் என அனைவரும் கோரியதற்காக ; சில கட்சி தலைமைகளுடன் பேச்சுகளை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்
அந்த வகையில் நானும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியதாகவும் அப்போது பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்த கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் என அவரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரும் அதனை ஏற்றுக்கொண்டதன் பிரகாரமே தற்போது தவிசாளர் தெரிவுகள் இடம்பெறுகின்றன எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்