குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் விரைவில் செயற்கை மழை பெய்யச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் செயற்கை மழையயை பெய்யச் செய்யக்கூடிய ஓர் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறு செயற்கை மழை முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. செயற்கை மழை பெய்யச் செய்யக்கூடிய நிபுணர்கள் இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த நிலையில் செயற்கை மழை பெய்யச் செய்யும் முறைமைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, நாட்டில் வரட்சி நிலவி வருகின்ற நிலையிலும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.