குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தின் துகள்கள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30ம் திகதி முதல் 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த விண்கலம் பூமியயைத் தாக்குமா என குறிப்பிடப்படுகிறது. Tiangong-1 என்ற விண்வெளி மையமே இவ்வாறு பூமியின் ஏதேனும் ஓர் பகுதியில் விழக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
அதேவேளை 2022ம் ஆண்டில் ஆய்வாளர்களுடன் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை நடாத்துவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.