153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான அண்டி மரே மீளவும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உபாதை காரணமாக சில காலமாக மரே டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், நெதர்லாந்தில் நடைபெறவுள்ள டச் கிராஸ் கோர்ட் போட்டித் தொடரில் அண்டி மரே பங்கேற்க உள்ளார்.
இந்தப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விம்பிள்டன் போட்டித் தொடரில் மரே பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரே போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love