Home உலகம்ரஸ்ய ராஜதந்திரிகள் வொஷிங்டனிலிருந்து வெளியேற்றம்

ரஸ்ய ராஜதந்திரிகள் வொஷிங்டனிலிருந்து வெளியேற்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்ய ராஜதந்திரிகள் வொஷிங்டனிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். நாடு கடத்தப்பட்ட ரஸ்ய ராஜதந்திரிகளே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து ரஸ்யா நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றனர். இரண்டு விமானங்களில் இந்த ராஜதந்திரிகள் ரஸ்யா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

வொஷிங்டனில் அமைந்துள்ள டுலாஸ் விமான நிலையத்திற்கு இரண்டு ரஸ்ய விமானங்கள் வருகை தர உள்ளதாகவும் இதில் ராஜதந்திரிகள், ரஸ்யா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியாவில் உளவாளி மற்றும் அவரது மகள் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் உலகின் பல நாடுகளிலிருந்து குறிப்பாக மேற்குக நாடுகளிலிருந்து ரஸ்ய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே அமெரிக்காவிலிருந்தும் ரஸ்ய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More