Home இலங்கைகண்டி அனர்த்தம் – முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட நான்கு பேர் கைது…

கண்டி அனர்த்தம் – முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட நான்கு பேர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தமை தொடர்பாக முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட நான்கு பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் கண்டியில் சில இடங்களில் தலைமறைவாக இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறை  தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன. சந்தேக நபர்களில் இருவர் கண்டி அம்பதென்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றைய இருவர் திகணை மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களை சேர்நதவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று தெல்தெனிய மற்றும் பூஜாப்பிட்டிய நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு விரிவான விசாரணைகளை நடத்தி வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More