குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து தமது தரப்பு கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது தரப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்த நேரத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதற்கு ஆதரவளித்து வந்துள்ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற செய்வதா அல்லது தோற்கடிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு தற்போது ஜனாதிபதியிடம் உள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நுவரெலியா – சீதா –எலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெற செய்யக் கூடிய பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாகவும் வெற்றி பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.