Home இலங்கைஅரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் கோரப்படும் – ஐ.தே.க…

அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் கோரப்படும் – ஐ.தே.க…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது ஏற்புடையதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை அமோதித்துவிட்டு அதன் பின்னர் வெளியிடங்களுக்குச் சென்று அங்கு விமர்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டு அரசாங்கத்தில் நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாயின் அரசாங்கத்தை விட்டு விலகிக் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளனர். இது குறித்து சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More