குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு கோரும் போது, பதவி, வாகனங்கள் மற்றும் பணத்தை கொடுத்து பிரச்சினை மூடி மறைக்க முயற்சிப்பதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, கட்சியில் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகும்வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தானும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்றும் இருந்து வருகிறது. ஐக்கிய தேசியக்கட்சி மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்திக்கு உள்ளான கட்சியாக மாறியுள்ளது எனவும் இதற்கு கட்சியின் தலைமைத்துவம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக தாங்கள் கட்சியை மறுசீரமைக்குமாறு கோரும் போது, எம்மை அழைத்து, பதவி, பணம், வாகனங்களை கொடுத்து சமாளிக்க பார்க்கின்றனர். தன்னையும் தனியான வந்து சந்திக்குமாறு பிரதமர் கூறினார், அதில் எந்த பிரயோசனமும் இல்லை. இது எமது தனிப்பட்ட பிரச்சினைகளை அல்ல, கட்சியின் பிரச்சினைகளை தீர்த்து கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.