குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேலில் தங்கியுள்ள ஆபிரிக்க அகதிகள் மேற்குலக நாடுகளில் குடியேற்றப்பட உள்ளனர். இஸ்ரேலில் சரண் புகுந்துள்ள பாரியளிலான ஆபிரிக்க அகதிகளை கூட்டாக மீளவும் ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் தலையீட்டின் அடிப்படையில் இந்த அகதிகள் மேற்குலக நாடுகளில் குடியேற்றப்பட உள்ளனர். இஸ்ரேலில்; அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ள சுமார் 16000 ஆபிரிக்க அகதிகள் கனடா, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில குடியேற்றப்பட உள்ளனர்.
இந்த அகதிகள் ஞாயிற்றுக் கிழமை முதல் மீளவும் ஆபிரிக்காவிற்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் நாடு கடத்தும் நடவடிக்கைகளை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.