Home இலங்கைஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய தேசிய முன்னணி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய தேசிய முன்னணி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு முன்னர் பதவி விலக வேண்டும் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பிரதமருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். இதனடிப்படையில், பிரதமர் பதவி விலகாது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்டு, அதனை தோற்கடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் அதனை தோற்கடிக்கும் சூழல் காணப்படுவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More