குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விடயத்தின் தான் சுயாதீனமாக செயற்பட போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோருடன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் யோசனையை முன்வைக்குமாறு ஜனாதிபதி கூறியதாகவும் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.