நாளைய தினம் முதல் புதிய அரசாங்கமொன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியீட்டப்பட்டாலும் தோல்வியடைந்தாலும் நாளை புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு பிரதமர் வெற்றியீட்டினால் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது. எனவே தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதமர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் ஒரு மணித்தியாலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை முதல் புதிய அரசாங்கம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
186
Spread the love