Home இலங்கைபிரதமர் பதவிவிலக மாட்டார் – ஐக்கிய தேசிய முன்னணி

பிரதமர் பதவிவிலக மாட்டார் – ஐக்கிய தேசிய முன்னணி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிவிலக மாட்டார் என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பிரதமர் பதவி விலகக் கூடாது என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். இந்த தகவலை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரை பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதவிவிலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் சிரேஸ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, பிரதமரிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய தேசிய முன்னணி இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More