குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.
அதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்தனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 09 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய் , நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதுடன் மாலை மீண்டும் மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி மாவட்ட செயலர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என சபை உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானித்து உள்ளனர்.