நேஷன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்ட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தககப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும், இராணுவ படைகளின் பிரதானியுமான அமல் கருணாசேகரவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் சாந்தனி டயஸ் உத்தரவிட்டுள்ளார். இன்று நண்பகல் 1.30 மணியளவில் இராணுவ வைத்தியசாலையில் வைத்து சந்தேக நபரை பார்வையிட்டதன் பின்னர் நீதிவான் இந்த உத்தர்வை பிறப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்காக மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் நேற்று புலனயவுப் பிரிவில் ஆஜராகாது இராணுவ வைத்தியசாலையில் சென்று சிகிச்சைகளுக்காக சேர்ந்துள்ளார். இந் நிலையிலேயே நேற்று மாலை இராணுவ வைத்தியசாலைக்கு சென்ற சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு குழு அமல் கருனாசேகரவைக் கைது செய்தது.
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது…
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.