குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டென்னிஸ் நட்சத்திரம் ரபால் நடால் மீளவும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் பங்கேற்றதன் பின்னர், நாளை நடைபெறவுள்ள டேவிஸ் போட்டிகளிலேயே நடால் பங்கேற்க உள்ளார்.
உபாதை காரணமாக ஸ்பெய்னின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் சில காலமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நடால் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
30 வயதான நடால், ஜெர்மனியின் பிலிப் கொல்சிரைபர் ( Philipp Kohlschreiber ) ஐ டேவிஸ் கிண்ண போட்டியில் எதிர்த்தாட உள்ளார். 2004ம் ஆண்டின் பின்னர் நடால் டேவிஸ் கிண்ண ஒற்றையர் போட்டியில் தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.