வங்கிகளில் பழைய தாள்களை மாற்ற வரும் பொதுமக்களின் கையில் அழியாத மையை வைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையகம் நிதித்துறையிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பழைய தாள்களை இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.
மீண்டும் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பணத்தை மாற்றுகிறார்கள் என எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்திய நிதித்துறை அமைச்சு பணம் எடுக்க வரும் பொதுமக்களின் கையில் பணம் எடுத்ததற்கான அடையாளமாக மை வைக்கப்படும் என்று அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து நேற்றிலிருந்து கையில் மை வைக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நிதித்துறை அமைச்சகத்திற்கு பல மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர உள்ளதால் பொதுமக்களின் கையில் அழியாத மையை வைக்க வேண்டாம் என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.