குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய உளவாளியின் மகளது உடல் நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய உளவாளியான செர்ஜி ஸ்கிரிபல் ( Sergei Skripal ) மற்றும் அவரது மகளான யூலியா ஸ்கிரிபல் ( Yulia Skripal )ஆகியோர் மீது பிரித்தானியாவில் வைத்து இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
66 வயதான செர்ஜி ஸ்கிரிபலின் உடல் நிலையில் பெரிதான முன்னேற்றம் இல்லை எனவும் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரது மகள் யூலியா சற்றே உடல் நலம் தேறியுள்ளார். தாம் நாளுக்கு நாள் குணமடைந்து வருவதாகவும், வலுப்பெற்று வருவதாகம் யூலியா தெரிவித்துள்ளார்.

SALISBURY, ENGLAND – MARCH 16: Police officers stand by the cordon near the scene connected to the Sergei Skripal nerve agent attack as investigations continue on March 16, 2018 in Salisbury, England. Britain has expelled 23 Russian diplomats over the nerve agent attack on former spy Sergei Skripal and his daughter Yulia, who both remain in a critical condition. Russian Foreign Minister Sergei Lavrov has responded by saying that Moscow will also expel British diplomats. (Photo by Jack Taylor/Getty Images)


