-மன்னார் காட்டாஸ்பத்திரியில் நீண்ட கால தேவையாக இருந்த ஜும்மா பள்ளியின் குறையினை நிவர்த்தி செய்யும் முகமாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமான றிசாட் பதியுதீனின் வாக்குறுதிக்கமைய சவூதி நாட்டின் நிதி உதவியுடன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை காட்டாஸ்பத்திரி கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
காட்டாஸ்பத்திரி ஜும்மா பள்ளி நிர்வாக தலைவர் அப்துர் ரஹீம் அவர்களின் வழி நடத்தலில் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் , அமைச்சர் றிசாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்வில் ஒ.எச்.ஆர்.டி நிறுவன தலைவர் சஹாப்தீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள், நிதி உதவிய சவூதி நாட்டின் பிரதிநிதிகள் ,பள்ளி நிர்வாகத்தினர் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.