குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் உடன்படிக்கையை இராணுவம் மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாது இராணுவம், படையினரை லெபனானுக்கு அமைதி காக்கும் பணிக்காக படையினரை அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன்மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடனான உடன்படிக்கையை மீறி இராணுவம்
செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உதலாகம இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதேவேளை படையினரை லெபனானுக்கு அனுப்பி வைத்துள்ளதனை இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது