Home இலங்கைசுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ராஜபக்ஸக்கள்…

சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ராஜபக்ஸக்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாத்தை கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஸக்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் அதிகாரம் பெரும்பாலும் மஹிந்த ஆதரவாளர்களிடம் செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சியின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும் ஜனாதிபதியின் கரங்ளைப் பலப்படுத்த போவதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More