எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்குவதே பொருத்தமானதாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்தமை நாடாளுமன்ற மன்ற பாரம்பரிய முறைமைகளுக்க முரணானதாகவே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் சம்பந்தன் பிரதமருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு அரசாங்கத்தின் பங்காளியாக செயற்பட்டு வருகின்றார் எனவும் இது எதிர்க்கட்சி பதவிக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். எனவே எதிர்கட்சி தலைவர் என்பதை விட புதிய அமைச்சரவையில் அமைச்சர் என்பதே சம்பந்தனுக்கு பொருத்தமாகவே காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் வழங்கவேண்டும் எனும் கோரிக்கையை தெளிவுப்படுத்தும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.