Home உலகம்சிரிய ராணுவ விமானத்தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் உயிரிழப்பு

சிரிய ராணுவ விமானத்தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் உயிரிழப்பு

by admin

சிரியாவில் உள்ள ராணுவ விமானத்தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில், பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம்ஸ் நகரம் அருகில் உள்ள தய்பூர் என்ற விமான தளத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தாக்குதலை அமெரிக்க போர் விமானங்கள் நடத்தியதாக செய்தி வெளியிடப்படட் போதும் பின்னர் இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக சிரியா அரச n ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இஸ்ரேல் விமானப்படைக்கு சொந்தமான எப்-15 ரக விமானங்கள் தான் மேற்படி தாக்குதலை நடத்தியதாக அவை தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More