Home உலகம்பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில் தென் ஆபிரிக்க வீரர் வெற்றி

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரின் 100 மீற்றர் போட்டியில் தென் ஆபிரிக்க வீரர் வெற்றி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொதுநலவயா நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் அகானி சிம்பினி (Akani Simbine)  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 24 வயதான சிம்பினி 10.03 செக்கன்களில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் மற்றுமொரு வீரரான ஹென்றிச் புரூண்டிஸ் (Henricho Bruintjies ) 10.17 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து இரண்டாம் இடத்தையும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமெய்க்காவின் யோஹான் ப்ளேக் 10.19 செக்கன்களில் 100 மீற்றரைக் கடந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ட்ரினிடாட் அன்ட் டுபாகோ தீவுகளைச் சேர்ந்த மிச்செல் லீ ஆய் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். ஜமெய்க்கானவின் கிறிஸ்டினா வில்லியம்ஸ் இரண்டாம் இடத்தையும், காயுன் எவன்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More