ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் அண்ணாசாலையில மறியல்; போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் சீமான், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் போட்டி நடந்தே தீரும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளநிலையில் போட்டியை காண ரசிகர்கள் அண்ணாசாலை வழியாக மைதானம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அண்ணாசாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதைத் தொடர்ந்து எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஐபிஎல் டிக்கெட்டுக்களை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரு வாகனமும் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதனால் அண்ணாசாலையில் பதற்றம் நிலவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது