குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன இராணுவ முகாம் அமைக்கப்படாது என தென் பசுபிக் பிராந்திய வலய நாடான வனாத்து (vanuatu) அரசாங்கம் தெரிவித்துள்ளது. வனாத்துவில் சீனா இராணுவ முகாமொன்றை அமைப்பது குறித்து பெய்ஜிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. வனாத்துவில் இராணுவ முகாமொன்றை அமைப்பது குறித்து சீனா ஆர்வம் காட்டி வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், வனாத்துவில் வெளிநாடுகளுக்கு இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கும் திட்டமில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அணிசேரா கொள்கையுடைய நாடு எனவும், இராணுவ மயமாக்களை விரும்பவில்லை எனவும் வனாத்துவின் வெளிவிவகார அமைச்சர் ரால்ப் ரெஜெனுவான் ( Ralph Regenvanu ) தெரிவித்துள்ளார்.