Home இலங்கைவிஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி – சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி – சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் த.வசந்தரூபனையே இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழுவினர் இன்று (11) யாழ்.மாநகர சபையில் வைத்து விசாரணை முன்னெடுத்துள்ளனர். இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More