169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இன்றைய தினம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Spread the love