Home இலங்கைவவுனியா விருந்தினர் விடுதியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு…

வவுனியா விருந்தினர் விடுதியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு…

by admin

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவரின் சடலத்தை காவற்துறையினர் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய அந்தோனி நிக்சன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More