குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க இந்த விடயம் குறித்து இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் சில சம்பவங்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டுவதில் கால தாமதம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னரே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமை குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவங்கள் குறித்த சாட்சியங்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னதாகவே அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.