குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு வார காலத்தில் 105 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி முதல் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்ளின் ஊடாக இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் 3 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வீதியை பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை 23 மில்லியன் ரூபாவும், சனிக்கிழமை 14 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 23 வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் கடந்த ஆண்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குறித்த காலப்பகுதியில் மட்டும் 230 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டிருந்தது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.