Home இந்தியாபெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

by admin


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியை 46 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் 14-வது போட்டிய நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 214 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நஇன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More